தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு 2021
TANGEDCO / TANTRANSCO ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்காக மட்டும் நடத்தப்படும் துறை தேர்வானது 22.12.2021 அன்று நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 16 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த துறை தேர்வின் மூலம் Technical Officer, Accounts Officer, Internal Audit Officers & Subordinate Officers என பல பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் Rs.400/- + Rs.72/- (18% GST) தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 19.04.2021 அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விண்ணப்பத்தார்கள் Departmental Test தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். துறை தேர்வானது 22.12.2021 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 07.05.2021 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.