TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் 2023 வெளியீடு – Download செய்வது எப்படி?
பிப்ரவரி 25, 26 ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட TNDTE தட்டச்சு தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவினை அறிந்துகொள்வது எப்படி என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNDTE தேர்வு முடிவு:
தமிழகத்தில் பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடநெறி சுருக்கெழுத்து, கணக்கு மற்றும் தட்டச்சு பாடங்களுக்கான TNDTE தட்டச்சு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தட்டச்சு தேர்வு முடிவினை www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது
டிகிரி முடித்தவரா? SBI MF-ல் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது எப்படி TNDTE தட்டச்சு முடிவுகளை அறிந்து கொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் முகப்பு பக்கத்தில் இருக்கும் ரிசல்ட் டேப்பில் கிளிக் செய்து, உள்நுழைவு சான்றுகளான ரோல் எண், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் பின் TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.