தமிழக தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககம்‌ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !

0
தமிழக தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககம்‌ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க !
தமிழக தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககம்‌ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க !
தமிழக தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககம்‌ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !

 

தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககத்தால்‌ ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும்‌ Computer on Office Automation (COA) தேர்வுகள்‌ அரசாணையின்படி பிப்ரவரி /மார்ச்‌ நடத்துவதற்கு அரசின்‌ அனுமதி பெற்றுள்ளதால்‌ 2022ல்‌ தேர்வு நடத்துவதற்கான தேர்வு ஆயத்த பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்‌ அடிப்படையில்‌ COA தேர்வு நடத்துவது குறித்தான ஏற்கனவே 2021ல்‌ வெளியிடப்பட்ட அறிவிக்கையில்‌ விடுபட்டுள்ள விவரங்களை தெரிவித்து வழிமுறைகளில்‌ மாற்றம்‌ செய்து தற்போது 2022 ஏப்ரல்‌ மாதத்தில்‌ COA, தேர்வினை நடத்துவது தொடர்பான திருத்திய அறிவிக்கை 23.02.2022 அன்று முன்னணி தமிழ்‌ நாளிதழில்‌ (தமிழகம்‌ முழுவதும்‌) விளம்பரம்‌ செய்யப்பட்டது. மேலும்‌, தேர்வு குறித்தான விரிவான விவரங்கள்‌ இயக்கக இணையதளத்தில்‌ http://www.tndte.gov.in/ மற்றும்‌ http://www.tndtegteonline.in/GTEOnline/ வெளியிடப்பட்டு தேர்வுகள்‌ நடத்தப்படவுள்ளன.

COA தேர்வு மையம்:

2022 ம்‌ ஆண்டு COA தேர்வு நடத்துவதற்காக மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி 44 தேர்வு மையங்கள்‌ நிர்ணயித்து அறிவிக்கை வெளியிடப்பட்டன. தற்போது, நிர்வாக காரணங்களால்‌ 146-அரசு பாலிடெக்னிக்‌ கல்லூரி, மோகனூர்‌ தேர்வு மையத்திற்கு பதிலாக 533 – பாவை பாலிடெக்னிக்‌ கல்லூரி, ராசிபுரம்‌ நாமக்கல்‌ கல்லூரியை மாற்று தேர்வு மையமாக அமைக்கப்பட்டுள்ளது.

COA- 2022 தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்துள்ளதால்‌ மேற்காணும்‌ அறிவிக்கையில்‌ குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களுள்‌ சில மையங்களில்‌ மிக அதிகமாக மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. மேலும்‌, அம்மையங்களில்‌ போதிய இடவசதியும்‌, செயல்முறை தேர்விற்கான போதுமான கணினிகள்‌ இல்லாததால்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ மற்றும்‌ தேர்வு அவசரம்‌ கருதி ஏற்கனவே வெளியிடப்பட்ட மையங்களும்‌ சேர்ந்து இணைப்பில்‌ குறிப்பிட்டுள்ள 27 தேர்வு மையங்களை புதிய தேர்வு மையங்களாக அமைத்து தேர்வுகள்‌ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணாக்கர்களும்‌ இப்புதிய தேர்வு மையத்தை தேர்வு செய்யும்‌ வகையிலும்‌ மேலும்‌ கூடுதலாக ஒரு தேர்வு மையம்‌ தேர்வு செய்ய http://www.tndtegteonline.in/GTEOnline/ இணையதளம்‌ மூலமாக தேர்வு செய்து தங்கள்‌ விருப்பத்தினை 05.04.2022 மாலை 5 மணிக்குள்‌ இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யுமாறு அனைத்து தேர்வர்களுக்கும்‌ இதன்‌ மூலம்‌ தெரிவிக்கலாகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும்‌, இயக்ககத்தால்‌ அங்கீகரிக்கப்பட்ட பயிலகத்தின்‌ மூலமாக விண்ணப்பித்தவர்கள்‌ மற்றும்‌ தனி தேர்வர்கள்‌ புதிய தேர்வு மையங்களை இணையதளம்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்வது தொடர்பான வழிமுறைகள்‌ இணைப்பில்‌ குறிப்பிடப்பட்டுள்ளன என்ற விவரம்‌ தெரிவிக்கலாகிறது.

Computer on Office Automation (COA) திருத்திய தேர்வு கால அட்டவணை:

21.03.2022-ல்‌ இயக்கக இணையதளத்தில்‌ வெளியிடப்பட்ட தேர்வு கால அட்டவணையில்‌ கருத்தியல்‌ தேர்வுகள்‌ (Theory) 09.04.2022 மற்றும்‌ செயல்முறை தேர்வுகள்‌ (Practical) 10.04.2022 (ம) 11.04.2022 ஆகிய தேதிகளில்‌ தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும்‌ காரணங்களினால்‌ மாணாக்கர்கள்‌ தேர்வு மையத்தை தேர்வு செய்ய கால அவகாசம்‌ அளிக்கப்பட்டுள்ளதால்‌ ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு கால அட்டவணையில்‌ மாற்றம்‌ செய்து திருத்திய தேர்வு கால அட்டவணைப்படி தேர்வுகள்‌ நடைபெறும்‌ என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Revised Examination Time Table:

Theory Examination – 23.04.2022. (From 10.30 A.M to 12.30 P.M)
Practical Examination – 24.04.2022 and 25.04.2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!