TNDTE COA 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சென்னை TNDTE கம்ப்யூட்டர் ஆஃபீஸ் ஆட்டோமேஷன் 2023 தேர்வுகளின் இறுதி முடிவை வெளியிட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.
TNDTE COA 2023 தேர்வு:
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சென்னை TNDTE ஆனது கம்ப்யூட்டர் ஆஃபீஸ் ஆட்டோமேஷன் தேர்வுக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன் (COA) சான்றிதழ் படிப்புக்கான தேர்வுக்கு மொத்தம் 12179 பேர் விண்ணப்பித்த நிலையில், 11758 பேர் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டனர. அதில் 11206 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் மொத்த தேர்ச்சி விகிதம் 95.3% ஆக உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் எகிற துவங்கிய தங்கத்தின் விலை – சவரன் ரூ.88 உயர்வு!
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சென்னை TNDTE, கம்ப்யூட்டர் ஆஃபீஸ் ஆட்டோமேஷன் முடிவுகளை செப் 22ம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவினை அறிந்து கொள்ளும் விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வழிமுறைகள்:
- முதலில் dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில், “கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்_AUG2023-Result-Reg” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது ஒரு pdf திரையில் தோன்றும்.
- பின்னர் TNDTE தேர்வு முடிவுகள் திரையில் வரும்.