TNCSC ல் உதவியாளர் & கிளெர்க் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

TNCSC ல் உதவியாளர் & கிளெர்க் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant, Record Clerk & Security பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷன் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Assistant, Record Clerk & Security பணிகளுக்கு என்று மொத்தமாக 527 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் 08 ம் வகுப்பு/ 12 ம் வகுப்பு/ B.Sc டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிகளுக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் Record Clerk பணிக்கு ரூ.8,784/- ஊதியம் என்றும், Assistant மற்றும் Security பணிக்கு ரூ.8,717/- ஊதியம் என்றும் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!