தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் பணி வாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் பணி வாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் பணி வாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் பணி வாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது கடந்த சில தினங்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Research Associate, Senior Research Fellow, Field Assistant, Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow (NRM) பணிக்கு 03 பணியிடம், Technical Assistant (Field) பணிக்கு 01 பணியிடம், Field Assistant பணிக்கு 01 பணியிடம், Senior Research Fellow (CPMB & B) பணிக்கு 10 பணியிடம், Field Assistant/ Lab Assistant பணிக்கு 01 பணியிடம், Manager பணிக்கு 01 பணியிடம், Research Associate பணிக்கு 01 பணியிடம், Subject Matter Specialist பணிக்கு 09 பணியிடம் என மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு MTech, M.Sc Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.Technical Assistant (Field), Field Assistant, Field Assistant/ Lab Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Diploma in Agriculture Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் M.Tech in Biotechnology, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும். Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Ph.D in Biotechnology/ Biochemistry Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும். Subject Matter Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Ph.D, M.Sc Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 69,937/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Subject Matter Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 26.04.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதனை தொடர்ந்து மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 13.04.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து (26.04.2022) நாளை நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!