தமிழகத்தை நெருங்கிய மழை.. தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் நியூஸ்!
தமிழகத்தை நோக்கி மழை நெருங்கி வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தை நெருங்கிய மழை:
தமிழகத்தில் இப்போது மழைக்காலம் நெருங்கி வருவதால் அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் சமீபத்தில் மிரட்டி வந்த தென்மேற்கு பருவமழை விரைவில் விடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்த வடகிழக்கு பருவம் தான் அதிக மழைபொழிவை வழங்கும். அதனால், தற்போது முதலே ஆயத்த பணிகளும் தயார் நிலையில் உள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – ஞாயிறு விலை நிலவரம்!
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அலர்ட் நியூஸ் அப்டேட்டை வழங்கியுள்ளார். அதாவது, சென்னைக்கு மிக அருகில் மழை வந்துவிட்டதாகவும், விரைவில் அது தமிழ்நாட்டிற்கு மழைப்பொழிவை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனால் மதுரைக்கு கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.