தமிழகத்தில் பிப். 12 வரை வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!

0
தமிழகத்தில் பிப். 12 வரை வறண்ட வானிலையே நிலவும் - வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!
தமிழகத்தில் பிப். 12 வரை வறண்ட வானிலையே நிலவும் - வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!
தமிழகத்தில் பிப். 12 வரை வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

ஜனவரி மாத இறுதியில் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர், திருவள்ளூர் மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையும் பெய்தது.

தமிழக அரசு பள்ளிகள் தரம் உயர்த்துதல் – கணக்கெடுக்கும் பணி துவக்கம்!!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி இலங்கை திரிகோணமலைக்கும் – மட்டக்களப்புக்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. மேலும் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்தது.

தற்போது தமிழக மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தமிழக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப். 08 ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!