தமிழகத்தில் செப்.9 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் செப்.9 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.9 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.9 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று நீலகிரி, கோயம்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்ச மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, தென்‌ மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, சேலம்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

06.09.2021: வட உள்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

07.09.2021 முதல்‌ 09.09.2021: வட கடலோர மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய வங்க கடல்‌ பகுதியில்‌ அடுத்த 24 மணி நேரத்தில்‌ ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன்‌ காரணமாக இன்று மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC & UPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

05.09.2021, 06.09.2021: மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

06.09.2021: ஆந்திர கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய வங்க கடல்‌, வட மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

அரபிக்கடல்‌ பகுதிகள்‌

05.09.2021 முதல்‌ 09.09.2021 வரை தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!