தமிழகத்தில் செப்.28 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் செப்.28 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.28 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.28 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

தென்‌மேற்கு பருவ காற்று காரணமாக இன்று தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, மதுரை, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌, தென்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

27.09.2021: தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

புதுப்பொலிவுடன் விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வைரல் ப்ரோமோ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

28.09.2021: நீலகிரி, கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர்‌, ராணிப்பேட்டை, மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

29.09.2021, 30.09.2021: வட மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌கடல்‌ பகுதிகள்‌:

26.09.2021 27.09.2021: குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று. மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகறார்கள்‌ .

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

26.09.2021, 27.09.2021: கேரளா, லட்சத்தீவு மற்றும்‌ தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!