தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை! தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

20.09.2021: புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, திருவண்ணாமலை, சேலம்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, தென்‌ மாவட்டங்கள்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!

21.09.2021, 22.09.2021: வட மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

23.09.2021: வடமாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகம் முழுவதும் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ காலை நேரங்களில்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும்‌ மாலை மற்றும்‌ இரவு நேரங்களில்‌ பொதுவாக மேகமூட்டத்துடனும்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!