தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

வட கடலோர தமிழ்நாட்டில்‌ 1.5 கிலோமீட்டர்‌ உயரம்வரை நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வேலூர்‌, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்‌சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

25.10.2021: புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, விருதுநகர்‌, மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, கடலூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 – டிஜிபி அறிவுறுத்தல்!

26.10.2021: சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

27.10.2021, 28.10.2021: டெல்டா மாவட்டங்கள்‌, கோயம்புத்தூர்‌, சேலம்‌, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌

24.10.2021: தென்‌கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!