தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை ‘இந்த’ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை 'இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை 'இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை ‘இந்த’ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

16.08.2021 முதல்‌ 18.08.2021 வரை: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ வட உள்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

கேரளாவில் கைதான மீரா மிதுனை சென்னை அழைத்து வந்த போலீசார் – தீவிர விசாரணை!

19.08.2021: வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருல பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

15.08.2021,16.08.2021: தெற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

15.08.2021 முதல்‌ 19.08.2021 வரை: மத்திய மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடிகளை எறிந்த ரசிகர்கள், இந்திய ஜெர்சியுடன் மைதானத்திற்குள் நுழைந்த நபர்!

16.08.2021,17.08.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

15.08.2021 முதல்‌ 18.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 70 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!