தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில், பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை அறிவிப்பு:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌,

16.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி மற்றும்‌ ஒரு சில உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

17.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி ) மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி மற்றும்‌ ஒரு சில உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

18.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

19.07.2021, 20.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி ) மாவட்டங்கள்‌ மற்றும்‌ ஒரு சில உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை,

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல்‌ பகுதிகள்‌:

18.07.2021 முதல்‌ 20.07.2021 வரை: தெற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

20.07.2021: மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

16.07.2021 முதல்‌ 18.07.2021 வரை: கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

16.07.2021 முதல்‌ 20.07.2021 வரை: தென்‌ மேற்கு அரபிக்கடல்‌, மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

18.07.2021 முதல்‌ 20.07.2021 வரை: வடக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!