ஏழு பல்கலையில் ஆன்லைன் தேர்வுகள் !!!! – வழிமுறை வெளியானது

0
ஏழு பல்கலையில் ஆன்லைன் தேர்வுகள் !!!! - வழிமுறை வெளியானது
ஏழு பல்கலையில் ஆன்லைன் தேர்வுகள் !!!! - வழிமுறை வெளியானது

ஏழு பல்கலையில் ஆன்லைன் தேர்வுகள் !!!! – வழிமுறை வெளியானது

சென்னை பல்கலைக்கழகத்தினை தொடர்ந்து தமிழகத்தில் 7 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வழிமுறைகளும் வெளியாகியுள்ளன. அந்த பல்கலைக்கழகங்களையும் அதன் வழிமுறைகளையும் கீழே வழங்கியுள்ளோம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டாலும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படவே தீர்மானிக்கப்படுகிறது.

சென்னை பல்கலையினை தொடர்ந்து அண்ணாமலை பல்கலை., பாரதிதாசன் பல்கலை., பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., காமராஜர் பல்கலைக்கழகம் என அனைத்திலும் சென்னை பல்கலையின் வழிமுறைகளையே பின்பற்ற உள்ளன.

தேர்வு வழிமுறைகள் :

  • மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஏ4 தாளில் தேர்வெழுதி அவரவர் பல்கலைக்கழக அல்லது கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • வினாத்தாட்கள் மாணவர்களுக்கு இணையதளம் அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
  • மாணவர்கள் 18 பக்கங்களுக்கு மிகாமல் 90 நிமிடங்களில் தேர்வினை எழுதி முடிக்க வேண்டும்.
  • விடைத்தாள்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
  • மாணவர்கள் விடைத்தாள்களை டைப் செய்யவோ புத்தகத்தின் பக்கங்களை ஓட்டவோ அனுமதி இல்லை.
  • பதிவேற்றம் செய்வதற்கு கால தாமதம் ஏற்பட்டால் அதற்கும் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.
  • இணையத்தில் தேர்வு விடைத்தாள்களை பதிவேற்ற முடியாதவர்கள் தேர்வு விடைத்தாள்களை அடுத்த 3 மணி நேரத்திற்குள் கல்லூரியின் தேர்வு கட்டுப்பட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!