TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை ஆணையர் தகவல்!

0
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை ஆணையர் தகவல்!
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை ஆணையர் தகவல்!
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை ஆணையர் தகவல்!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 15000 காலியிடங்கள் உள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பணியிடம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இத்தேர்வு மூலமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் பணியிடத்தில் 15000 இடங்கள் காலியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு பள்ளிகளில்‌ உள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி – விண்ணப்பங்கள் வரவேற்பு! ITEP முழு விபரம் இதோ!

ஆனால் நடப்பு ஆண்டில் அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் பணியாளர்‌ நிர்ணய கணக்கீட்டின் படி சில பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தேவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக பள்ளிக்‌கல்வி ஆணையர்‌ கூறியதாவது, மாணவர்களின் தரமான கல்விக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் தற்போது 4,675 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனால் தற்போது 9 மாவட்டங்களுக்கு 3000 பணியிடங்கள் பகிர்ந்தளிக்கபட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதர படிகள் ஆகியவற்றை நடைமுறையிலுள்ள IFHRMS மூலமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் இந்த கூடுதலான பணியிடங்களை அரசாணையில் குறிப்பிட்டு உரிய ஆணை வழங்குமாறு பள்ளி கல்வித்துறை ஆணையர் கேட்டு கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!