TN TRB அரசு உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை!

0
TN TRB அரசு உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - முக்கிய கோரிக்கை!
TN TRB அரசு உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை!

மதுரை மாவட்டத்தில் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தினசரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் போது மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி மாணவர்களை வற்புறுத்தியது. இதுகுறித்து பெற்றோர்கள் அரசிடம் புகார் தெரிவித்தனர்.

Exams Daily Mobile App Download

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் கல்வி கட்டணத்தை கட்ட முடியவில்லை என்று கூறினர். அப்போது ஏராளமானோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது. அதனால் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறினர். இதனையடுத்து காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை எழுந்தது.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு! முழு விபரங்கள் இதோ!

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் சங்க கூட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், கணினி உதவியாளர், ஆகிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு 2 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here