TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - TET பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - TET பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதவிருப்பவர்களுக்கு இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

தேர்வு பாடத்திட்டங்கள்:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்கள் அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில், மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு பாடங்களை எடுக்க, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு TET தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இத்தேர்வுகளை நடத்துவதாக ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்காக ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவுற்றது. இப்போது TET தேர்வுக்காக கல்வியியல் கல்லூரி மாணவர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 தாள்களுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

  • அதற்காக, முதலில் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • அதில் TAMILNADU TEACHER ELIGIBILITY TEST என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து அங்கு தோன்றும் ‘detailed syllabus paper 1 and paper 2’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

  • இதில் பேப்பர் 1 என்ற ஆப்ஷனை கிளிக் செய்யும்போது syllabus pdf என்ற கோப்பு திறக்கும்.
  • இதே போல பேப்பர் 2க்கு உரிய பாடத்திட்டங்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.

இப்போது பேப்பர் 1ல், 1 முதல் 5 வரையுள்ள வகுப்புக்கான பாடத்திட்டம் இடம்பெற்றிருக்கும். அதாவது, சைல்ட் டெவெலப்மென்ட் (30 மார்க்), மொழிப்பாடம் 1 (30 மார்க்), மொழிப்பாடம் 2 (30 மார்க்), கணக்கு (30 மார்க்), சுற்றுச்சூழல் கல்வி (30 மார்க்) என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான பாடத்திட்டங்கள் இந்த கோப்பில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனுடன் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பாடத்திட்டங்கள் எந்த பக்கத்தில் தொடங்கி எதில் முடிவடைகிறது என்ற விவரங்களும் pdf கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!