TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் – முக்கிய விவரங்கள் இதோ!!

0
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் - முக்கிய விவரங்கள் இதோ!!
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் - முக்கிய விவரங்கள் இதோ!!
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் – முக்கிய விவரங்கள் இதோ!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்வர்கள் தங்களின் வினாத்தாள் மற்றும் தங்களின் பதில்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான அதிகாரபூர்வ அறிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவுரையாளர் தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2017-2018ம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கு 1,058 காலிப்பணியிடங்கள் நிரப்பப் இருப்பதாகவும், அதற்கான தேர்வுகள் குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது. அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டு மறுதேர்வானது வரும் அக்.28 ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் போ் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.

தமிழகத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!

அதனை தொடர்ந்து தேர்வர்கள் தேர்வு எழுத இருந்த தேர்வு மையங்கள் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு தென் மாவட்டங்களில், தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு வட மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் வழங்கப்பட்டிந்தது. இதனால் தேர்வர்களுக்கு கடும் அலைச்சல் மற்றும் அதிகமான செலவு ஏற்படும் எனவும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தேர்வை இரண்டு வாரங்கள் தள்ளிவைத்து, தேர்வு மையங்கள் தேர்வர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழக மின்வாரியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – தேர்வு அறிவிப்பு வெளியீடு!!

இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு கணினி முறையில் கடந்த டிசம்பர் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடத்தப்பட்டது. தற்போது தேர்வில் கலந்து கொண்டவர்கள் தேர்வின் வினாத்தாள் மற்றும், தங்களின் பதில்களை பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளது. வினாத்தாள் மற்றும் பதில்கள் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கதிருடன் இணைந்த கண்ணன்!

வழிமுறைகள்:

  • தேர்வர்கள் முதலில் http://trbpolviewqp.onlineapplicationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு, Enter Registration Number பகுதியில் உங்களின் எண்ணை உள்ளிட்ட வேண்டும்.
  • select date of birth பகுதியில் உங்களின் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும்.
  • select date of exam என்பதை தேர்வு செய்து சரியான பதிலை உள்ளிட வேண்டும்.
  • select batch பகுதியில் எந்த ஆண்டிற்கான தேர்வு எழுதியுள்ளீர்கள் என்பதை பதிவிட வேண்டும்.
  • பின்னர், கேப்ட்சா வை பதிவிட வேண்டும்.
  • இப்பொழுது சமர்ப்பி என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!