TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.8 முதல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடக்கம்!

0
TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - டிச.8 முதல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடக்கம்!
TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - டிச.8 முதல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடக்கம்!
TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.8 முதல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தகுதித்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் நாளை (08.12.2021) நடைபெறவுள்ளது. இந்த தேர்வை சுமார் 2,738 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

விரிவுரையாளர் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. விரைவில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை தொடர்ந்து தொடர்ந்து அரசு கல்லூரிகளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் வருகிற டிச.11 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 2000+ பணியிடங்கள்!

தற்போது அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிபணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தகுதித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன் படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தேர்வின் மாதிரி டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNUSRB PC போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு || முன்பதிவு அவசியம்..!

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நாளை பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வு ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. சுமார் 2,738 பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். தேர்வானது காலை, மாலை இரு வேளைகளிலும் தலா மூன்று மணி நேரம் தேர்வு பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி, திண்டல் வி.இ.டி., கலை அறிவியல் கல்லூரி, துடுப்பதி ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரி, சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் தொழில் நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!