TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு – பிப் 12ம் தேதி முதல் தேர்வு! முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப் 12 முதல் தொடக்கம் - வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப் 12 முதல் தொடக்கம் - வாரியம் அறிவிப்பு!
TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு – பிப் 12ம் தேதி முதல் தேர்வு! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் பல்வேறு அரசு துறைகள் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இதில் கூறியதாவது, தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை -1 உள்ளிட்ட பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வருகிற பிப்ரவரி 12ம் தேதி முதல் போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த போட்டி தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் முதலாவதாக 12ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான தேர்வு குறித்த விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைவாசிகளுக்கு ஹாப்பி நியூஸ் – பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி! அரசு அறிவிப்பு!

இதில் தமிழ் வணிகவியல், மனை அறிவியல், இந்திய கலாசாரம், இயற்பியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல், பொருளியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் மற்றும் உடற்கல்வியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். கொரோனா காலம் என்பதால் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.trb.tn. nic.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு பாட வாரியாக தேர்வு தேதிகள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  • பிப்ரவரி 12ம் தேதி காலை – தமிழ் முதல் தாள்
  • பிப்ரவரி 12ம் தேதி மாலை – தமிழ் இரண்டாம் தாள்
  • பிப்ரவரி 13ம் தேதி – வணிகவியல், மனை அறிவியல், இந்திய கலாசாரம், இயற்பியல்
  • பிப்ரவரி 14ம் தேதி – புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல்
  • பிப்ரவரி 15ம் தேதி – பொருளியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் மற்றும் உடற்கல்வியியல்

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!