TN TRB தேர்வு வாரிய 2207 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம்
தமிழ்நாடு அரசு, ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNTRB) ஆனது சமீபத்தில் பள்ளி கல்வி மற்றும் இதர துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Post Graduate Assistants / Physical Education Directors Grade – I & Computer Instructor Grade I ஆகிய பணிகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் மொத்தமாக 2027 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN TRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதிவாளர்கள் 01.07.2021 தேதியின் படி, அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பணிக்கு ஏற்ப இளநிலை/ முதுகலை பட்டதாரி/ பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
TN Job “FB
Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.36,900 -1,16,600 வரை ஊதியம் வழங்கப்படும்
- தேர்வு கட்டணமாக பொது விண்ணப்பத்தார்கள் ரூ.500/– மற்றும் எஸ்சி எஸ்சிஏ/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250/- செலுத்த வேண்டும்.
- இந்த பணியிட தேர்வுகள் நவம்பர் மாதத்தில் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக 16.09.2021 முதல் 17.10.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அந்த அவகாசம் முன்னதாக 31.10.2021 அன்று வரையிலும் பின்னர் 09.11.2021 அன்று வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
அந்த அவகுசமும் தற்போது, தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக 09.11.2021 அன்றிலிருந்து 14.11.2021 ஆக மாற்றப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் உடனே தங்களின் பதிவுகளை தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.