TN TRB PG Assistant Exam Instruction 2019

0
TN TRB PG Assistant Exam Instruction 2019
TN TRB PG Assistant Exam Instruction 2019

TN TRB PG Assistant தேர்வு அறிவுரைகள் 2019

2018-2019ம் ஆண்டிற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 க்கான கணினி வழித் தேர்வு 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 தேதிகளில் காலை மற்றும்  மாலை ஆகிய இரு வேளைகளில் தமிழகமெங்கும் 154 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்வை சுமார் ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். அனைத்து தேர்வுகளும் கணினி வழி தேர்வுகளாக மேற்கொள்ளப்படவுள்ளது. 20.09.2019 வரை ஒரு லட்ச்சத்து மூன்றாயிரம் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்துள்ளனர். பதிவிறக்கம் செய்துள்ள தேர்வர்களில் பெரும்பான்மையானவர்கள் பயிற்சி தேர்வினை முயற்சி செய்துள்ளனர்.

Download TN TRB PG Assistant  Hall Ticket 2019

கணினி வழி தேர்வுகளை பொறுத்தவரை, தேர்விற்கான வினாக்கள், அவரவர்களுக்கென்று தேர்வு மையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கணினியில் வரிசைகிறமமாக 1 லிருந்து 150 வினாக்கள்  கணினி திரையில் வெளிப்படும். தேர்வர்கள் ஒவ்வொரு வினவாகவோ, வரிசையாகவோ அல்லும் முன்னும் பின்னுமாகவோ தேர்வெழுத வகை செய்யப்பட்டுள்ளது. இறுதியாக உறுதி செய்தபின் விடைகுறிப்பினை பதிவேற்றம் செய்திடவும் , முழுத் தேர்வும் முடித்தபின் இறுதியாக அனைத்து வினாக்களுக்குரிய விடைகளையும் பதிவேற்றம் செய்திடும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சி தேர்வு (Practice Test / Mock Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் ((Login ID and Password) பயன்படுத்தி http://trb.tn.nic.in/ –ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது.

Download TN TRB PG Assistant Press Notice 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

For Whats APP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!