தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய 2207 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு செப்.20க்கு மாற்றம்

0
தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய 2207 காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் பதிவு செப்.20க்கு மாற்றம்
தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய 2207 காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் பதிவு செப்.20க்கு மாற்றம்

தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய 2207 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு செப்.20க்கு மாற்றம்

தமிழ்நாடு அரசு, ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNTRB) ஆனது சமீபத்தில் பள்ளி கல்வி மற்றும் இதர துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Post Graduate Assistants / Physical Education Directors Grade – I & Computer Instructor Grade I ஆகிய பணிகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் மொத்தமாக 2027 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த பணியிடங்கள் பாடவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. பதிவாளர்கள் 01.07.2021 தேதியின் படி, அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி (பாடத்திற்கு ஏற்ப) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

பதிவாளர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.36,900 -1,16,600 வரை ஊதியம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணமாக பொது விண்ணப்பத்தார்கள் ரூ.500/– மற்றும் எஸ்சி எஸ்சிஏ/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250/- செலுத்த வேண்டும். இந்த பணியிட தேர்வுகள் நவம்பர் மாதத்தில் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக 16.09.2021 முதல் 17.10.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதன் ஆன்லைன் பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஆன்லைன் பதிவு நடைபெறவில்லை. எனவே அதன் பதிவுகள் தொடங்கும் தேதியினை 16 லிருந்து 20 ஆம் தேதியாக மாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. எனவே 20.09.2021 முதல் 17.10.2021 அன்று வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான இணைய முகவரி மற்றும் ஏனைய தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

Download TNTRB Official Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!