TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – விடைத்தாள் வெளியீடு!

0
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு

TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – விடைத்தாள் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 / கணினி பயிற்றுநர் நிலை 2207 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த கடந்த 12.02.2022 முதல்‌ 20.02.2022 வரை இருவேளைகளில்‌ நடைபெற்றது. இந்த தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகள் அடிப்படையில் நடைபெற்றது. இந்த கணினி வழித்‌ தேர்வுக்கான விடைக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் வெளியீடு:

தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இதன் அடிப்படையில் 2020 – 2021 ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 / கணினி பயிற்றுநர் நிலை – 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

இத்தேர்வில்‌ பங்கேற்ற தேர்வர்கள்‌ தனது வினாத்தாள்‌ மற்றும்‌ தாம்‌ பதில்‌ அளித்த விடைகளை பின்வரும்‌ வழிமுறைகளைப்‌ பின்பற்றி பதிவிறக்கம்‌ செய்துகொள்ளும்‌ வகையில்‌ தற்போது ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

வினாத்தாளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • https://trbpgctviewqp.onlineapplication.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.
  • பதிவு எண்ணை உள்ளிடவும்
  • பிறந்த தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
  • தேர்வு தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
  • தொகுப்பைத் (Batch) தேர்ந்தெடுக்கவும்
  • கேப்ட்சா எழுத்துக்களை உள்ளிடவும்
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
  • வழிமுறைகளைப் படிக்கவும்
  • “Click here to view attempted Question Paper” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்‌ (Tentative Key Answers) அனைத்துப்‌ பாடங்களுக்கும்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ http://www.trb.tn.nic.in/ Master Question paperல்‌ வெளியிடப்பட்டுள்ளது.
  2. தேர்வர்கள்‌ இவ்விடைக்குறிப்பின்‌ மீதான தமது ஆட்சேபனைகளை Objection Tracker மூலம்‌, இணையதள வழி (Online) யில்‌ உரிய வழிமுறைகளைப்‌ பின்பற்றி உரிய ஆதாரங்களுடன்‌ தெரிவிக்கலாம்‌.
  3. தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேதியில்‌ எந்த Sessionல்‌ தேர்வு எழுதினார்களோ அந்த Sessionக்கு உரிய Master Question Paper TRB இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.
  4. வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு Objection தெரிவிக்கும்‌ போது Master Question paper ன்‌ வினா எண்‌ மட்டுமே குறிப்பிட வேண்டும்‌. மேலும்‌, அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும்‌. சான்றாவணங்கள்‌ இணைக்கப்படாத முறையீடுகள்‌ பரிசீலனைக்கு ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது. இவையனைத்தும்‌ முற்றிலுமாக நிராகரிக்கப்படும்‌.
ஆட்சேபனை தெரிவிக்க:

ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின்‌ மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ 09.04.2022 மாலை 06.00 மணி முதல்‌ 13.04.2022 மாலை 3.30 மணி வரை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரியில்‌ மட்டுமே ஆதாரங்களுடன்‌ பதிவு செய்திடல்‌ வேண்டும்‌. அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள்‌ / மேற்கோள்‌ புத்தகங்கள்‌ (Standard Text Books / Reference Books) ஆதாரம்‌ மட்டுமே அளிக்க வேண்டும்‌. கையேடுகள்‌ மற்றும்‌ தொலைதூர கல்வி நிறுவனங்களின்‌ வெளியீடுகள்‌, ஆதாரங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால்‌ அல்லது பிறவழி முறையீடுகள்‌ ஏற்கப்பட மாட்டாது, அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும்‌. மேலும்‌, பாட வல்லுநர்களின்‌ முடிவே இறுதியானது என்றும்‌ அறிவிக்கப்படுகின்றது.

இதற்காக, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்:
  • படி 1 – இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
  • படி 2 – அடிப்படை தகவலைப் பயன்படுத்தி உள்நுழையவும்
  • படி 3 – உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்
  • படி 4 – வழிமுறைகளைப் படித்து, அறிவிப்பை ஏற்கவும்
  • படி 5 – முதன்மை வினாத்தாளைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
  • படி 6 – கொடுக்கப்பட்ட புலங்களில் ஆட்சேபனையை எழுப்பவும்.
  • படி 7 – துணை ஆவணத்தைப் பதிவேற்றி சேமி மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

Click here for Response Sheet / View Answer Sheet

Click here for Objection Tracker

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!