TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

0
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம், ஆனது தற்போது PG Assistants/ Physical Education Director Grade-1/Computer Instructor Grade-I ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TN TRB PG Assistant தேர்வு தேதி:

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் /உடற்கல்வி இயக்குநர்‌ நிலை – 1/ கணினி பயிற்றுநர்கள்‌ நிலை – 1 – 2020 – 2021 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து கணினி வழித்‌ தேர்வு இரண்டு அட்டவணைகளில்‌ முறையே 12.02.2022 முதல்‌ 15.02.2022 வரை மற்றும்‌ 16.02.2022 முதல்‌ 20.02.2022 வரை (19.02.2022 நீங்கலாக – உள்ளாட்சித்‌ தேர்தல்‌ ஆகிய தேதிகளில்‌ இருவேளைகளில்‌ (காலை/மதியம்) நடைபெற உள்ளது.

TN TRB தேர்வு நுழைவுச்‌ சீட்டு:
  1. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின்‌ நுழைவுச்‌ சீட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரி http://www.trb.tn.nic.in/ ல்‌ தேர்வர்கள்‌ தங்களது User ID மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ உள்ளீடு செய்து 05.02.2022 முதல்‌ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  2. தேர்வர்கள்‌ நுழைவுச்‌சீட்டினை printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்‌சீட்டில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள நேரம்‌ மற்றும்‌ அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும்‌ ஒரு அசல்‌ அடையாள அட்டையுடனும்‌ (Original Identity Card) விண்ணப்பிக்கும்‌ போது பதிவேற்றம்‌ செய்த புகைப்படத்தின்‌ அசல்‌ பிரதியையும்‌ தவறாமல்‌ எடுத்து வர வேண்டும்‌.
  3. தேர்வு நாளன்று தேர்வர்கள்‌ முற்பகல்‌ தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும்‌, பிற்பகல்‌ தேர்விற்கு 1.30 மணிக்குள்ளாகவும்‌ தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகை புரிய வேண்டும்‌ என்ற விவரம்‌ தெரிவிக்கலாகிறது. தாமதமாக வரும்‌ விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு மையத்திற்குள்‌ அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌.
  4. மேற்படி கணினி வழித்‌ தேர்விற்கான பயிற்சித்‌ தேர்வு மேற்கொள்ள விரும்பும்‌ தேர்வர்கள்‌ தங்களின்‌ உள்நுழைவு மற்றும்‌ கடவுச்சொல்லினைப்‌ பயன்படுத்திwww.trb.tn.nic.in-ல்‌ இணையதளத்தில்‌ பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  5. இந்த பயிற்சி வினாக்கள்‌ முற்றிலும்‌ பயிற்சிக்காக மட்டுமே எனவும்‌ தெரிவிக்கலாகிறது. மேலும்‌ நுழைவுச்‌ சீட்டில்‌ மாவட்டம்‌/நகரம்‌ மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும்‌ ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்‌சீ ட்டு இணையதளத்தில்‌ வெளியிடப்படும்.
Examination Date District Admit Card Venue Admit Card
12-Feb 05-Feb 09-Feb
13-Feb 06-Feb 10-Feb
14-Feb 07-Feb 11-Feb
15-Feb 08-Feb 12-Feb
16-Feb 09-Feb 13-Feb
17-Feb 10-Feb 14-Feb
18-Feb 11-Feb 15-Feb
20-Feb 13-Feb 17-Feb

Download TN TRB Admit Card

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!