TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – வயது வரம்பு நீட்டிப்பு! அரசாணை வெளியீடு!

2
TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 - வயது வரம்பு நீட்டிப்பு! அரசாணை வெளியீடு!
TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 - வயது வரம்பு நீட்டிப்பு! அரசாணை வெளியீடு!
TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – வயது வரம்பு நீட்டிப்பு! அரசாணை வெளியீடு!

தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு 45 ஆக நீட்டிக்கப்பட்டு இந்த தளர்வுகள் 2022ம் ஆண்டு இறுதி வரை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

கொரோனா 2ம் அலை காரணமாக தமிழக அரசுப் பணிக்கான போட்டித்தேர்வுகள் எதுவும் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்படவில்லை. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் தற்போது நோய் தொற்று குறைந்திருக்க கூடிய சூழலில் அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

இந்த தேர்வில் 40 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி விதிகளின் படி ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனம் செய்வது தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடையே இருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பட்டு வந்தது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை அறிக்கை!

இதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு விதிக்கப்பட்ட வயது வரம்பை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலந்து கொள்ளும் பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும், மற்ற பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் வயது வரம்பு அதிகரிக்கப்படுகிறது. இந்த வயது வரம்பு நீட்டிப்பு 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கைக்கு பொருந்தும் என்றும் இந்த அறிவிப்பு வரும் 31.12.2022 அன்று வரை சிறப்பு நிகழ்வாக நிர்ணயிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியல் – ஆய்வு அறிக்கை!

மேலும் அதிகரிக்கப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரையுள்ள ஆசிரியர் பணி நியமனம் வரை பொருந்தும். இப்போது 2023 ஜனவரி 1ம் தேதி முதல், ஆசிரியர் பணியில் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 42 எனவும் பிற பிரிவினருக்கு 47 எனவும் நிர்ணயிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தேர்வர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனுடன் முதுகலை ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

    • How do the rest of the teachers community keep silence?
      Even the teachers who are not passing the exams they also not able to get second chance for the age of 48,49,50 years aged teachers.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!