TN TRB தேர்வர்களின் தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் – கால அவகாசம் நீட்டிப்பு!

0
TN TRB தேர்வர்களின் தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் - கால அவகாசம் நீட்டிப்பு!
TN TRB தேர்வர்களின் தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் - கால அவகாசம் நீட்டிப்பு!
TN TRB தேர்வர்களின் தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் – கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம்:

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதித்தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெற்றது. அதில் முதுநிலை உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 பதவிகளுக்கான தேர்வுகள் கணினி வழியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சுமார் 190 தேர்வு மையங்களில் 2.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.

இந்த தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் பள்ளி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை கல்வியியல் படிப்புகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வாணையம் உத்தரவிட்டது. மேலும் விண்ணப்பத்தில் தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கையில் ‘ஆம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல் – 5G வந்தால் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்குமா?

இந்த சான்றிதழ்களில் உரிய அலுவலரின் கையொப்பம் இடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 25ம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இணையதளத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கலும், கால தாமதமும் ஏற்பட்டது. அதனால் தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 27ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளல்லாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த சான்றிதழ் பதிவேற்றமானது கடந்த 22ம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here