TN TRB வருடாந்திர கால அட்டவணை வெளியீடு – 10,370+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0

TN TRB வருடாந்திர கால அட்டவணை வெளியீடு – முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது (TN TRB) வருடாந்திர கால அட்டவணையினை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

TN TRB வருடாந்திர கால அட்டவணை:

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது (TN TRB) ஒவ்வொரு ஆண்டும் இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் என பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. 2407 முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வானது சமீபத்தில் நடத்தப்பட்டு அதற்கா தேர்வு முடிவுகளானது நேற்று வெளியானது. அதனை தொடந்து ஆசிரியர் தகுதி தேர்வானது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி , பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக், விரிவுரையாளர்கள் என 10,371 காலி பணியிடங்களை நடப்பு ஆண்டில் நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 1874 பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பு மற்றும் 3987 இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் 1358 கல்லூரி உதவி பேராசிரியர்கள், 493 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் மற்றும் 97 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!