TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - TET பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்வது எப்படி?
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - TET பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்வது எப்படி?
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இப்பதிவில் தேர்வு முறை, கல்வித்தகுதி குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

பாடத்திட்டம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ச்சியாக கடந்த மாதம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!

ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் விண்ணப்பிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தால் இடைநிலை ஆசிரியர்களுக்கானது DTED கல்வித் தகுதி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் எழுத கூடிய தேர்வாகும். ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

Exams Daily Mobile App Download

தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் TET தேர்வின் பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. குழந்தை வளர்ச்சி கற்பித்தல் – 30 மொழிப்பாடம் – 30, கணிதம் -30, சுற்றுச்சூழல் கல்வி – 30, ஆங்கிலம் – 30 என மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும் என்றும் தேர்வானது 3 மணி நேரத்திற்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!