TN TET தேர்வு தேதி மீண்டும் ஒத்திவைப்பு – தேர்வாணையம் ஷாக் அறிவிப்பு !
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் ஆனது ஆசிரியர்தகுதி தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TN TET தேர்வு தேதி:
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
அதன் படி, 2022 ஆம் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என, மார்ச் 7ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில், மார்ச் 14 முதல் ஏப் 13 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏப்ரல் 18 முதல் 26 வரை விண்ணப்ப பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
முதலில் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நிர்வாகக் காரணங்களினால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், ஆசிரியர் தகுதி தாள் I தேர்வானது 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
தற்போது இந்த தேர்வு தேதியும் நிர்வாகக் காரணங்களினால் ஒத்திவைக்கப்படுவதாக ஆணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்