TN TET ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி !

0
TN TET ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் - தேர்வர்கள் அதிர்ச்சி !
TN TET ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் - தேர்வர்கள் அதிர்ச்சி !
TN TET ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி !

ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அதன் படி இந்த ஆண்டுக்கான டெட்’ தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

TN TET ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம்:

2022 ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என, மார்ச் 7ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில், மார்ச் 14 முதல் ஏப் 13 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏப்ரல் 18 முதல் 26 வரை விண்ணப்ப பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 25ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நிர்வாகக் காரணங்களினால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022ம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ அறிவிக்கை எண்‌.012022, நாள்‌ 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம்‌ 25 முதல்‌ 31 வரை உள்ள தேதிகளில்‌ தாள்‌-I ற்கு மட்டும்‌ முதற்கட்டமாக தேர்வுகள்‌ கணினிவழியில்‌ மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம்‌ தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால்‌, தாள்‌ I ற்கான தேர்வு 10.09.2022 முதல்‌ 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது.

மேற்படி கணினிவழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இது குறித்த அறிவிக்கை, தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச் சட்டு (Admit card) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!