TN TET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள் – தேர்வாணையம் அறிவிப்பு!

0
TN TET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள் - தேர்வாணையம் அறிவிப்பு!
TN TET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள் - தேர்வாணையம் அறிவிப்பு!TN TET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள் - தேர்வாணையம் அறிவிப்பு!
TN TET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள் – தேர்வாணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவிருக்கும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பினால், வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிக்குள் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்தது. இந்நிலையில் இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

TRB முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இந்த தேர்வு முதல், இரண்டாம் தாள் எனும் வகையில் நடைபெறும். மேலும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் முதல் தாள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இரண்டாம் தாள் தேர்வை எழுதலாம். இதையடுத்து முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி ஏற்பாடு – அறநிலையத்துறை ஏற்பாடு!

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2 -க்கு 4,01,886 என 6,32,764 பேர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதை தொடர்ந்து விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து அலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்தது. எனவே விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 -க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் ஜூலை 11 முதல் ஜூலை 16 வரை திருத்தம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என TRB தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here