TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு – உடனே பாருங்க !

0
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு - உடனே பாருங்க !
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு - உடனே பாருங்க !
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு – உடனே பாருங்க !

ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 2022 ஆம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.04.2022 கடைசி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN TET ஆசிரியர் தகுதித் தேர்வு:

2 ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கத்திற்கு பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை. இதில் தாள்-I, தாள்-II என்ற இரு தாள்களுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் தாள்-Iக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் இதில் தாள்-IIக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதில் விண்ணப்ப ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியானவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!