தமிழகத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்கள் திறக்க அனுமதி? இந்து முன்னணி கோரிக்கை!

0
தமிழகத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்கள் திறக்க அனுமதி? இந்து முன்னணி கோரிக்கை!
தமிழகத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்கள் திறக்க அனுமதி? இந்து முன்னணி கோரிக்கை!
தமிழகத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்கள் திறக்க அனுமதி? இந்து முன்னணி கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை கடவுளை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்குமாறு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

புரட்டாசி மாதம்:

தமிழகத்தில் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாடு நினைவுக்கு வரும். இந்த புரட்டாசி மாதத்தில் அனைத்து நாட்களும் பெரும்பாலானோர் இறைச்சி எதுவும் உண்ணாமல் விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது. அதாவது ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்தது போல, ஆவணி ஞாயிறு விநாயகருக்கு உகந்ததை போல, புரட்டாசி சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. ஏனெனில் புரட்டாசி மாதத்தில் பெருமாள் திருமலையில் அவதரித்தார் என்பதனால் புரட்டாசி மாதம் விரதமிருந்து பெருமாளை தரிசித்தால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

தமிழக அரசு பணியில் சேர திட்டமிடுபவரா நீங்கள்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மேலும் புரட்டாசி சனிக்கிழமையில் சனிபகவான் அவதரித்ததனால் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து கடவுளை வழிபட்டால் சனிப்பார்வையால் ஏற்படும் துன்பங்கள் விலகும் என்பது மக்களின் நம்பிக்கை. கொரோனா பரவலின் காரணமாக கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து மால், தியேட்டர், டாஸ்மாக், பள்ளிகள் என அனைத்திற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கோவில்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்காமல் இருப்பது நியாயமற்றதாகும்.

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு இணையதளம் – மத்திய அரசு ஏற்பாடு!

அதிலும் புரட்டாசி சனிக்கிழமை இந்துக்கள் முக்கிய விரதம் இருந்து பெருமாளை வழிபடக்கூடிய மிகவும் புனிதமான நாள். ஆகவே சனிக்கிழமை இறைவழிபாட்டுக்கு கோயில்களை திறந்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்குமாறு இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்து முன்னணியின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!