தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

0
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு - உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு - உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னரும் வாக்கு எண்ணிக்கை நாள் அன்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் மூடல்:

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது. இதுபோன்ற வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை போன்ற பரபரப்பான நாட்கள் மற்றும் முக்கிய தினங்களின் போதும் பொதுவாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயா ராணி அவர்கள் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022 வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக 17.02.2022 காலை 10.00 மணி முதல் வாக்குபதிவு நாளான 19.02.2022 நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22.02.2022 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள்( FL1), FL.2 உரிமம் முதல் FL11 வரை (FL.6 தவிர) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003 விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் மூடப்பட்டிருக்க வேண்டும் உத்தரவிடப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல், கொரோனா கட்டுப்பாடுகள் மீறல் – போலீசார் அதிரடி நடவடிக்கை!

மேலே அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில், Indian Made Foreign Spirits Beer and Wine manufacturing Units மாநிலத்தின் எந்த பகுதியிலும், எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here