தமிழகத்தில் மே 1, 2 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு!!

0
தமிழகத்தில் மே 1, 2 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு!!
தமிழகத்தில் மே 1, 2 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு!!
தமிழகத்தில் மே 1, 2 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு!!

தமிழகத்தில் மே 1 தொழிலாளர் தினம் மற்றும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகள் மூடல்:

கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் படி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மது கடைகளில் டோக்கன் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மே மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியாளர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசு உத்தரவின் படி மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் மற்றும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினங்களை முன்னிட்டு இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான பயணங்களுக்கும் கொரோனா சான்று அவசியம்!!

அதன் படி சேலம் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட 2 நாட்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை மீறி மது விற்பது தெரிந்தால் அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக மே 2 ஆம் தேதியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!