தமிழக பள்ளிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – கொரோனா தொற்று எதிரொலி!

0
தமிழக பள்ளிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் - கொரோனா தொற்று எதிரொலி!
தமிழக பள்ளிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் - கொரோனா தொற்று எதிரொலி!
தமிழக பள்ளிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – கொரோனா தொற்று எதிரொலி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்றின் 2 ஆம் அலை பரவலால் மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிற்பாடு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மாணவர்கள், ஆசிரியர்கள் என பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை அரியலூர், நாமக்கல், கோவை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செப்.14 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அதனால் அந்த பள்ளிகளுக்கு ஒரு சில நாட்கள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த முள்ளங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் சகோதரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அப்பள்ளியை சேர்ந்த மற்ற 403 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ், கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தாலும் 14 நாட்கள் வரை கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – 92 காலிப்பணியிடங்கள்

மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது ஊழியர்கள் பள்ளிக்கு வருவதற்கும், போவதற்கும் தனி வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். தவிர ஒரு பள்ளியில் 3க்கும் அதிகமான வகுப்புகளில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் அந்த பள்ளிக்கு 3 முதல் 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்களது குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here