தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!

6
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!

தமிழகத்தில் 9, 11ம் வகுப்புகளுக்கு இன்று (பிப்ரவரி 8) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கு (1 முதல் 8 வரை) பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் ஆண்டு இறுதித்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ‘டேப்’ – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

அதற்காக மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக பள்ளிகளில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு. ஆங்காங்கே ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உடன் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் அல்ல – சமஸ்கிருதம், ஹிந்தி கட்டாயம்!!

பெரிதாக கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு இன்று முதல் (பிப்ரவரி 8) 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. இது தொடர்பாக டி.என்.பாளையத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், திட்டமிட்டபடி 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!

மேலும் முழு கல்விக் கட்டணத்தை செலுத்தினால் தான் பொதுத்தேர்வு எழுத அனுமதிப்போம் என கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய அளவில் பள்ளிக்கல்வித்துறை தற்போது முதல் இடத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பிற வகுப்புகளுக்கு (1 முதல் 8 வரை) பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. The tamilnadu govt need not discuss about reopening of schools for classes 1 to 8. Let them continue to do online classes. The reasons behind are as follows
    1) The tenth ,eleventh and 12th standard students have been affected so much during the pandemic and very less effective education
    2) If the schools start classes for 1 to 8 th ,then the teachers will have more work load and cannot concentrate for board exams.so its better to conduct physical classes from 9th std to 12th std only.
    3) The govt has done a blunder mistake in reducing the syllabus for board exams. Unit wise deleting should be done and not question wise.

  2. Just 3 months are more for ending this academic year.So finish this year with online classes for 1 to 8th students and then start the school from June onwards for all the students.This is the best way..ll

  3. I think it would be relevent if the gvnrmnt start classes for kids bcs kids are put under one cage and they don’t see anything than their parents and some parents are educated and some are not, if a child stays at home where parents are not educated what would that child learn so it’s good that putting the children back to school to refresh their tender minds open.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here