தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஏப்.13-ஆம் தேதி சித்திரை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுபடுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களுக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளவை ஆகும். மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் அந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்ற ஒரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 30 அன்று கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – தொடர் தோல்வி குறித்து மனம் திறந்த கேப்டன் ஜடேஜா!

கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட பட்டுத் துணிகள் கொண்டு கொடிமரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல், இந்த ஆண்டு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் 18 நாட்கள் தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் இந்த தேர் வலம் வரும். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் தோ்த்திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 14ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இல் கீழ் வராது என்பதால், அரசு பணிகளில் எந்த இடையூறு இல்லாமல் மாவட்டக் கருவூலம், அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here