தமிழகத்தில் நவ.1 முதல் 1 – 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் நவ.1 முதல் 1 - 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் நவ.1 முதல் 1 - 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் நவ.1 முதல் 1 – 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வட்டார பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் ஆய்வு:

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 – 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களின் கல்வி நிலை குறித்து அச்சம் ஏற்பட்டது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் லேப்டாப், கணினி, செல்போன் மூலம் பாடம் கற்பதால் வெகு நேரம் ஒரே இடத்தில் அமர வேண்டி உள்ளது.

TCS, Wipro, Infosys ஊழியர்களின் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work from Home திட்டம்!

மேலும் நாள் முழுவதும் மின் சாதனங்களை பார்ப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஆராய்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைந்து பணிகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – NPS திட்டத்தின் குறைந்தபட்ச வரவு, வயது வரம்பு! முழு விபரங்கள் இதோ!

அதனை தொடர்ந்து தற்போது பள்ளிகள் திறக்கப்படும் நாள் நெருங்கி விட்ட நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் வருகைக்காக செய்யப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அந்தந்த மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 27ம் தேதிக்குள் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here