தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

5
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 10,11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் கோடை விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கடந்த 2020 ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்ததால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து பரவிய கொரோனா அலைகளால் பள்ளிகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டு வந்தது. இதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் கடந்த வருடம் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. தற்போது பரவிய கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.

ESIC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 -தேர்வு கிடையாது…!

நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கும் என்றும் அதன் தொடர்ச்சியாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ல் தொடங்கி 30ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஊதியத்துடன் கூடிய விடுப்பு!

மேலும் 11ம் வகுப்பிற்கு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாடவாரியாகவும் தேர்வு கால அட்டவணை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையை தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களும் வெளியாகி உள்ளது. அதில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு மே 13 கடைசி வேலை நாளாகும் அதன் பிறகு கோடை விடுமுறை தொடங்க உள்ளது. 30 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிறந்த coaching centre – Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!