தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு – ஆஹா சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை முன்னதாக ஐந்து நாட்கள் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை:
தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைய உள்ளது. இதன் பிறகு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை உள்ள ஐந்து நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தி போன்றவை அரசு விடுமுறை தினங்களாகவும், சனி ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகவும் உள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த அதிருபியில் இருந்தனர். இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திலிருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் காலாண்டு தேர்வு விடுமுறையின் 7 நாட்களில் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
9ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் – 2023-24 கல்வியாண்டில் அதிரடி!
மேலும் இதற்கான வழிகாட்டுதல் வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறைகள் மேலும் நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிய வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.