தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அது குறித்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆய்வு பணிகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து வரும் நவம்பர் 1ம் தேதி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார்.

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் ஜாதிச் சான்றிதழ் பெறும் வசதி – மாவட்ட ஆட்சியர்!

முன்னதாக நவம்பர் 1ம் தேதியில் இருந்து நர்சரி பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையின் முடிவில் நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. ஆனால் திட்டமிட்டபடி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படாததால் பள்ளிகள் திறக்க தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கின் விசாரணையில் மாணவர்கள் மகிழ்ச்சியாகவே பள்ளிக்கு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் – சென்னை பல்கலை முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை மாவட்ட மற்றும் வட்ட பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், அக்டோபர் 27ம் தேதிக்குள் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதன்மை, மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு பணிகளை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here