பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவு இதுதான்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் முடியும் இது தான் என அவர் தெரிவித்து உள்ளார். அது குறித்த எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் கல்லூரிகளைக மூடிய அரசு தற்போது பல்வேறு தரப்பு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனினும் இன்னும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பிற்கு மட்டும் அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.
பள்ளிகள் எப்போது என்ற கேள்விகளுக்கு “பள்ளிகள் திறப்பை விட மாணவா்களின் உயிா்தான் முக்கியம். பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இதுவல்ல. பள்ளிகள் திறப்பு தொடா்பாக சுகாதாரத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறையுடன் ஆலோசித்த பின்னா் முதல்வா் முடிவெடுப்பார்” என கூறியுள்ளார்.
மேலும் அவர், “அதற்கு முன்பாக உள்ளாட்சித்துறையின் உதவியுடன் எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். எதிா்காலத்தில் வடிவமைக்கப்பட உள்ள வினாத்தாளைக் கருத்தில் கொண்டே பாடங்கள் குறைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்