அக். 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

0
அக். 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !
அக். 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

அக். 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதம் 01 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதால் அதற்கான பாதுகாப்பு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பள்ளி நிர்வாகங்கள் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டியத கடமைகள் என அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் மாணவர்களின் சுயவிருப்பதின் பேரில் தான் வர வேண்டும் எனவும், அதற்கான நெறிமுறைகள் சுகாதார வழிமுறைகள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.

நெறிமுறைகள் :
  • 50 சதவீத ஆசிரியர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்.
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவர். குழுக்களை சேர்ந்தவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்.
  • முதல் குழுவினை சேர்ந்த மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும்.
  • அடுத்த குழுவை சேர்ந்த மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும். ஆசிரியர்களுக்கும் இதே நெறிமுறைகள் தான்.

பள்ளி நிர்வாகங்கள் செய்ய வேண்டிய கடமைகள் :
  • மாணவர்கள் அனைவரும் 6 அடி இடைவெளி விட்டு தான் வகுப்பறையில் அமர்ந்திருக்கின்றனர் என்பதனை அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போதிய இடைவெளியை பின்பற்றி தான் உரையாடுகின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் சுற்றி திரிவதை ஒரு போதும் ஊக்குவிக்க கூடாது.
  • அவர்களுக்கு கொரோனா நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் செய்ய வேண்டியத கடமைகள் :
  • மாணவர்கள் தங்களது முகம் மற்றும் பிற பகுதிகளை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • அவர்களை சானிடைசர் மற்றும் முகக்கவசங்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
  • பள்ளியில் உள்ள உபகரணங்களை முடிந்தவரை தொடுவதை தவிர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • மாணவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை அவ்வப்போது உறுதி செய்தும் கண்காணித்து கொண்டும் இருக்க வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!