தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ! – மத்திய அரசு அனுமதி

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ! - மத்திய அரசு அனுமதி
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ! - மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ! – மத்திய அரசு அனுமதி

நாடு முழுவதும் புதிய 5.0 அன்லாக் அமலுக்கு வந்துள்ளது. இந்த அன்லாக்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதில் நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை திறப்பதற்கு அனுமதியினையும் மேலும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு !!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து நிறுவங்களும் மூடப்பட்டது. இதனால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டது. மேலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது.

பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் மாணவர்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படத்தினால் ஆன்லைன் வகுப்புகள் மூலமே கல்வி கற்று வருகின்றனர். மேலும் திரை அரங்குகள், பூங்காக்கள் போன்ற பல்வேறு பொது பயன்பாட்டு தளங்களும் திறக்கப்படாமல் இருந்தது.

அன்லாக் 5.0 !

தற்போது நாடு முழுவதும் அன்லாக் செயலி 5.0 செயல்பட துவங்கியது. இதில் பள்ளிகள் கல்லூரிகள் திரை அரங்குகள் போன்றவை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை கீழே வழங்கியுள்ளோம்.

  • அக்டோபர் 15ம் தேதி முதல் திரை அரங்குகள் / மல்டிபிளெக்ஸ் 50% இருக்கை வசதியுடன் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விரைவில் வெளியிடும்.
  • விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை அக்டோபர் 15 க்குப் பிறகு திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
  • பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகள் / பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
  • சமூக / கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு / கலாச்சார / மத / அரசியல் செயல்பாடுகள் மற்றும் பிற கூட்டங்கள் அதிகபட்சம் 100 நபர்களுடன் நடைபெற அனுமதி.
  • நபர்கள் மற்றும் பொருட்களின் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எந்த தடையும் இருக்காது. இதற்கு எவ்வித இ-பாஸ் போன்ற அனுமதிகள் தேவையில்லை.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!