தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை !

1
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை !
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை !

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை !

தமிழகத்தில் தற்போது 12ஆம் வகுப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆனது ஆலோசனை நடத்த உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக பள்ளிக் கல்வித்துறை :

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது சில மாதங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், அடுத்தபடியாக 9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறு வந்தன.

TN Job “FB  Group” Join Now

அடுத்தடுத்த கட்டங்களில் மீதமுள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தின் மத்தியில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டது. பொதுத்தேர்வுகள் நடைபெற இருப்பதனால் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தனர். அவர்களுக்கும் தேர்தல் பணிகளின் முன்னேற்பாடுகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது.

ஜூன் மாதத்தில் பொதுத்தேர்வுகள் ?

தேர்தல் பணிகளுக்கு பின்னர் மீண்டும் ஏப்ரல் 08 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளியில் கற்பித்தல் பணிகளை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக பொதுத்தேர்வுகள் நடைபெறுவது குறித்து திட்டமிடப்பட இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் மீண்டும் உடனடியாக பொதுத்தேர்வு பணிக்கு திரும்புவது என்பது சிரமம் என்பதனால் அப்பணிகளை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஏனெனில் மே 02 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதற்கடுத்த நாளான 03 ஆம் தேதி முதல் தேர்வினை நடத்துவது மிகவும் சிரமம் அளிக்கும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இப்பொதுத்தேர்வினை ஜூன் மாதத்தில் நடத்துவது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here