தேர்தலுக்கு பின் தேர்வுகள் ?? – தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

1
தேர்தலுக்கு பின் தேர்வுகள் - தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை
தேர்தலுக்கு பின் தேர்வுகள் - தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

தேர்தலுக்கு பின் தேர்வுகள் ?? – தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு தேர்வுகள் நடத்தலாம் என ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

பொது முடக்கம் :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொற்றின் தாக்கம் முழுவதுமாக குறையாத வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் !

ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பயின்று வரும் நிலையில் அவர்களுக்கான பொதுத்தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

TN Police “FB  Group” Join Now

மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்தல் மையங்கள் ஆக செயல்பட தேவைப்படும் என்பதனால் தேர்வுகளை எப்பொழுது நடத்துவது என்பது பெறும் சிக்கலாகவே உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் பொதுத்தேர்வுகளை நடத்தலாம் என தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகிறது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆகியோர் விவாதித்து கொண்டுள்ளனர். இதற்கான  இறுதி முடிவுகள் தமிழக அரசின் ஒப்புதலுக்கு பின்னர் வழங்கப்படும் என தெரிகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. sir exam vedam sir enagala epdi padika mudium neega soluga Jan maonth school open pana enga padika time irukathu athu poka over stress vara irukum so engalaku public exam vedam plss students ku konjam karuno kaduga ???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here