தமிழக ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் – பணிகள் தீவிரம்!

0
தமிழக ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் – பணிகள் தீவிரம்!

தமிழக ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்யும் கருவி மற்றும் பிரிண்டர் சாதனத்துடன் கூடிய ஒருங்கிணைந்த விற்பனை முனைய கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கருவிழி பதிவு:

தமிழக ரேஷன் கடைகளில் மாதம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் கைரேகை பதிவு கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த கைரேகை பதிவில் வயதானவர்களுக்கு கைரேகை பதிவாவதில்லை என்றும் சில நேரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலதாமதம் ஏற்படுவதாகவும் ரேஷன் அட்டைதாரர்கள் புகார் அளித்தனர்.

தமிழகத்தில் நாளை (டிச.04) மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் இதோ!

இந்த நிலையில் கண் கருவிழி பதிவு முறையை கொண்டு வர உணவு வழங்கல் துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ரேஷன் அட்டைதாரர்களின் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்க தேவையான இரண்டாம் கட்ட பணி துவங்கியுள்ளது. அதில் தற்போது தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக விழி ரேகை கருவி கைரேகை பதிவு கருவி மற்றும் பிரிண்டர் சாதனத்துடன் ஒருங்கிணைந்த விற்பனை முனைய கருவி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!